ஊழியர் நலன் என்பது வெற்று கோஷமல்ல. உயிர் மூச்சு

Saturday, October 15, 2016

BUNCH PAY யில் பலன்பெறும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்


         நமது கோட்டத்தில் 01.01.2016 அன்று PRE - REVISED PAY - ல் BASIC PAY Rs. 11510 ( 9110 + 2400 ) வாங்கிய அனைத்து தோழர்களுக்கும் தற்போது BUNCH PAY யின் பலன் கிடைத்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் மயிலாடுதுறை கோட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

  CONCEPT OF BUNCH PAY 

           X என்ற ஒருவர் 01.01.2016 அன்று PRE-REVISED PAY - ல் Rs. 11510 ( 9110 + 2400 ) என்ற BASIC PAY - ஐ வாங்கி இருந்தால் அவருக்கு REVISED PAY புதிய PAY MATRIX  - ன் படி Rs. 29600/- கிடைத்திருக்கும்.

            அதே சமயம் Y என்ற ஒருவர் ( X ற்கு JUNIOR )  01.01.2016 அன்று PRE-REVISED PAY SCALE - ல் Rs. 11170 ( 8770 + 2400 ) என்ற BASIC PAY - ஐ வாங்கி இருந்தால் அவருக்கும் REVISED PAY - ன் புதிய PAY MATRIX  - ன் படி Rs. 29600/- தான் கிடைத்திருக்கும்.

            X க்கும் Y க்கும் இடையே PRE - REVISED PAY ல் BASIC PAY ல் வித்தியாசம் இருந்த போதும் அவர்கள் REVISED PAY  புதிய PAY MATRIX முறைபடி ஊதியம் கணக்கிடும் போது இருவருக்கும் ஒரே ஊதியத்தில் வந்து அமைகிறது  அதாவது Rs. 29600 /- .

             இந்த காரணத்திற்காக தான் BUNCH PAY அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் PRE- REVISED PAY ல் JUNIOR - க்கும் SENIOR - க்கும் உள்ள இடைவெளி JUNIOR PAY - ல் 3% அல்லது அதற்கும் மேல் இருப்பின் அது இரண்டு INCREMENT இடைவெளியாக எடுத்துக்கொள்ளப்பட்டு அந்த SENIOR க்கு PAY MATRIX - ல் அதே LEVEL -ல் ஒரு INCREMENT வழங்கப்படும்.

               எடுத்துக்காட்டு   

                                                         JUNIOR PAY - 11170
                                                         SENIOR PAY - 11510
                                                                           --------------------
          இருவருக்கும் உள்ள இடைவெளி -     340
                                                                           --------------------

         இந்த இடைவெளி JUNIOR PAY -ல் 3% அல்லது அதற்கு இருக்கிறதா என பார்க்க வேண்டும்.

                340 / 11170 X 100 = 3.04 % ( 3% ற்கு மேல் உள்ளது )

             எனவே அந்த SENIOR க்கு ஒரு INCREMENT வழங்கப்பட்டு அவரது REVISED PAY Rs. 29600/- லிருந்து Rs. 30500/- என மாற்றி அமைக்கப்படும்.

               மற்றொரு எடுத்துக்காட்டு 

                                                         JUNIOR PAY - 17170
                                                         SENIOR PAY - 17460
                                                                           --------------------
          இருவருக்கும் உள்ள இடைவெளி -     290
                                                                           --------------------

                290 / 17170 X 100 = 1.688 % ( 3%  ற்கு குறைவாக உள்ளது  )

             எனவே இதில் SENIOR க்கு BUNCH PAY பொருந்தாது.


   ******************* அறிவோம் ; துணிவோம் **********************


No comments:

Post a Comment